இன்றைய பொன் மொழி


"வியாபார ரீதியாக அரசாங்கத்தை நடத்த முடியாது. அது மனிதாபிமானியாக
இருக்க வேண்டும். அது ஒரு இதயம் கொண்டிருக்க வேண்டும்." -ஹென்றி லெனன்

திங்கள், 7 மார்ச், 2011

பெண்களின் முன்னேற்றம் என்பது ஏட்டளவிலே

நமது இந்திய அரசியலமைப்பு Article 14 “Right to Equality” என்ற சமத்துவ உரிமையை அளித்துள்ளது. அதே போல் Article 15ன் படி "No Discrimination Grounds of Religion, Race, Caste, Sex or Place of Birthஎன்றுள்ளது. இவையெல்லாம் ஏட்டளவில் தான் என்றால் மிகையில்லை.

உதாரணமாக, ஒரு மதத்தின் தலைவராகவோ அல்லது ஒரு கோவிலின் அர்ச்சகராகவோ பெண்களால் வர முடிவதில்லை. ஏன் பெண்கள் மதத் தலைவர்களாக வர வேண்டும் என்று சொல்கிறேன் என்றால், மதம் சார்ந்த மரபுகள் அணைத்தும் பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் தடைகளாக் இருக்கின்றன என்பதால் தான்.

மேலும் நாட்டின் சட்டமியற்றும் அமைப்புகள் அணைத்திலும் பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது எல்லா தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தாலும் அக்கட்சியினர் போட்டியிட அனுமதிக்கும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையோ மிகவும் குறைவான சதவீதமே..

அதே போல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உள்ளது. அதுவும் ஏட்டளவிலே. உதாரணமாக, கட்டிட வேலை செய்யும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான ஊதியம் அளிக்கப்படுகிறதா? என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இதையல்லாம் பார்க்கும் போது, கீழே சொல்லப்பட்டுள்ள ஒரு நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது.

ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் ஏதோ ஒரு சிறு சச்சரவினால் ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருந்தனர். ஒரு நாள் கணவன் அதி காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருந்தது . அவ்வாறு எழுந்தால் தான் 5 மணிக்கு புறப்படும் இரயிலுக்குச் செல்ல முடியும். மனைவியிடமோ பேசவும் கூடாது அதே சமயம் அவளை எழுப்பவும் சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு காகிதத்தில் "அதி காலை 4 மணிக்கு எழுப்பவும் .” என்று மனைவியின் பார்வையில் படும்படி எழுதி வைத்தான். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது மணி 6 ஆகி இருந்தது உடனே மனைவியைப் பார்த்து, “உன்னை 4 மணிக்கே எழுப்பச் சொல்லி எழுதி வைத்திருந்தேனே ஏன் எழுப்பவில்லை " என்று கேட்டான். அதற்கு மனைவி, “ என் மேல் கோபப்படாதீர்கள் , உங்கள் தலையனைக்கு அருகில் பாருங்கள்" என்றாள். அங்கு பார்த்தால், “ 4 மணி ஆயிற்று எழுந்திருக்கவும் " என்று மனைவியும் ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தாள் .

இதே போலத்தான் இன்றைய பெண்களின் முன்னேற்றமும் ஏட்டளவில் தான் உள்ளது.

சரி, இத்தகைய தடைகளைக் கடந்து ஒரு சில பெண்கள் முன்னேற்றம் அடைந்தாலும் அவர்களால் அதை தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை. சமீபத்தில் நடந்த உண்மை நிகழ்வு இது, ஒருவிமானத்தின் விமான ஓட்டியாக பெண் விமானி ஒருவர் தனது விமான ஓட்டி அறையில் அமர்ந்து இருந்ததை கவனித்த பயணிகள் சிலர் அப் பெண் விமானி விமானம் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஆண் விமானியை கொண்டு விமானத்தை ஓட்டச் செய்தனர். ஆக, சட்டம் மட்டும் இருந்தால் போதாது, மக்களின் மனமாற்றமும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது.

சட்டங்களை உருவாக்குவதைவிட அவைகளை நிறைவேற்றுவது அதிக முக்கியம் " என்ற ஜெபர்சனின் கருத்தை இங்கே நினைவு கூறுதல் நலம்.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

//அடுத்த தடவை வந்தா மேப்போடதான் வரணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.//


என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு

Unknown சொன்னது…

//ஒரு நாள் கணவன் அதி காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருந்தது . அவ்வாறு எழுந்தால் தான் 5 மணிக்கு புறப்படும் இரயிலுக்குச் செல்ல முடியும். மனைவியிடமோ பேசவும் கூடாது அதே சமயம் அவளை எழுப்பவும் சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு காகிதத்தில் "அதி காலை 4 மணிக்கு எழுப்பவும் .” என்று மனைவியின் பார்வையில் படும்படி எழுதி வைத்தான். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது மணி 6 ஆகி இருந்தது உடனே மனைவியைப் பார்த்து, “உன்னை 4 மணிக்கே எழுப்பச் சொல்லி எழுதி வைத்திருந்தேனே ஏன் எழுப்பவில்லை " என்று கேட்டான். அதற்கு மனைவி, “ என் மேல் கோபப்படாதீர்கள் , உங்கள் தலையனைக்கு அருகில் பாருங்கள்" என்றாள். அங்கு பார்த்தால், “ 4 மணி ஆயிற்று எழுந்திருக்கவும் " என்று மனைவியும் ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தாள் .//


இது சூப்பரப்பு........

Muniees சொன்னது…

நன்றி நண்பரே, தங்களுடைய கருத்துரை, எனக்கு மேலும் பல புதிய பதிவுகளை வெளியிட தூண்டு கோலாக இருக்கிறது