பண்டிகை காலம் வந்து விட்டால் கொள்வனவு அதாவது ஷாப்பிங் செய்யும் பழக்கம் மக்களிடம் அதிகமாக உள்ளது. ஏனெனில் அச் சமயங்களில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பொருட்கள் அறிமுக படுத்தப் படுவதோடு தள்ளுபடி மற்றும் இலவசங்களையும் சேர்த்து விற்கபடுவதும் அனைத்திற்கும் மேலாக, மக்கள் கைகளில் அதிக பணப் புழககம் உள்ளதும் ஒரு காரணமாகும். சரி, அவ்வாறு ஷாப்பிங் செய்யும் போது பின் பற்ற வேண்டிய சில பயனுள்ள
குறிப்புகளை காண்போம்.1. இலவசங்களுக்காக, நீங்கள் வாங்க தீர்மானித்திற்கும் பொருட்களின் வர்த்தகக் குறியை (brand nameஐ) மாற்ற வேண்டாம்.
2. அதிகமான மக்கள் வாங்க வரும் நேரங்களை தவிர்த்து, பிற் பகல் 2 மணி முதல் 4 வரைக்கும் இடைப்பட்ட நேரத்தை வாங்குவதற்கு என்று ஒதுக்கவும்.
3. கள்ளச் சந்தையில் விற்கும் எலக்ட்ரானிக் பொருட்களை எப்பொழுதும் வாங்க வேண்டாம்.
4. வாங்கிய பொருட்களில் ஏதாவது குறைபாடு தெரிய வந்தால் மாற்றி கொள்ளக் கூடிய வசதி உள்ளதா என்றும் கொடுக்கப்பட்ட உத்திரவாத அட்டையில் கடை முத்திரை இடப் பட்டுள்ளதா என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
5. பழையவற்றிற்கு மாற்றாக புதிய பொருட்களை பரிமாற்ற வசதியிலோ (எக்சேஞ்ச் ஆபரிலோ) அல்லது வேறு ஏதேனும் சலுகைகளுக்காவோ பொருட்களை வாங்க வேண்டாம்.
6. நீடித்த உத்ரவாதத்துடன் கூடிய பொருட்களைப் பற்றியும் யோசிப்பது நலம்.
7. விலை மற்றும் பல நிறுவனப் பொருட்களை ஒப்பீடு செய்யும் கீழ் கண்ட வலைத் தளங்களுக்கு சென்றும் பொருட்களை வாங்குவது பற்றி முடிவு செய்யலாம்.
தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் தேவையானதை நீ விற்று விடுவாய். - கிளாரண்டன்
நன்றி மீண்டும் சந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக