விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் 8.1 இயக்க முறைமை பயன்படுத்தப்படும் உங்கள் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக
பதிவு இறக்கம் செய்ய,
கணினியில் ‘GET WINDOWS 10’ ஐகான் டாஸ்க் பாரில் தோன்றியிருக்க வேண்டும். டாஸ்க் பாரில் விண்டோஸ் ஐகான்
காட்டப்படவில்லை என்றால், உங்கள் சிஸ்டம் இன்னும் அப்டேட்
செய்யப்பட வேண்டும் என்று பொருள். அனைத்து அப்டேட்களும் செய்யப்பட்டிருந்தும்,
‘GET WINDOWS 10’ ஐகான்
தோன்ற பின் வரும் வழி முறைகளைக் கையாளவும்.கண்ட்ரோல் பேனல் சென்று ‘Programs and Features’ல் உள்ள ‘View installed updates’ஐ திறந்து KB3035583 & KB2952664 ஆகிய விண்டோஸ் அப்டேட்களைத் தேடிக் கண்டுபிடித்து நீக்கவும். பின்பு கணினியை ரீஸ்டார்ட் செய்யவும், அவ்வாறு ரீஸ்டார்ட் செய்யும் போது கணினி இன்டர்நெட் தொடர்பில் உள்ளதை உறுதி செய்து கொள்ளவும். விண்டோஸ் அப்டேட் KB2952664 என்ற அப்டேட் நிறுவதலுக்கு தயாராக இருக்கும், அந்த அப்டேடை நிறுவிக் கொள்ளவும். பின்பு http://download.windowsupdate.com/d/msdownload/update/software/updt/2015/05/windows6.1-kb3035583-x64_d6308e28c41fcbd15695343d83709ed1c4bf5812.msu என்ற லிங்கில் இருந்து KB3035583 என்னும் விண்டோஸ் அப்டேடை தறவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும். நிறுவிய அன்றோ அல்லது ஓரிரு நாட்களில் ‘GET WINDOWS 10’ ஐகான் டாஸ்க் பாரில் தோன்றி விடும். அதன் மூலம் விண்டோஸ் 10க்கு முன்பதிவு செய்திடும் பக்கம் கிடைக்கிறது. இதில் பதிவு செய்திடவும். பின்னர் குறிப்பிட்ட நாளில் எப்படி, தற்போதைய சிஸ்டம் விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திடப்படும் என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கும். ஜுலை 29 தொடங்கி, ஓர் ஆண்டுக்குள், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இல்லை எனில், கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டியதிருக்கும்.
நன்றி மீண்டும் சந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக