பூ திருடன் - சிறுகதை
-முனி
பாரதி
இன்னைக்கு வரட்டும், எப்படியாவது அந்த பூத்திருடனை
பிடிக்கிறேன் பார் என்று பாலாமணி அம்மையார் இரவு மூன்று மணியிலிருந்து கண் விழித்து
காத்துக் கொன்டிருந்தார். ஆனால், காத்திருந்த நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிக்கணக்காக மாறி
கடிகாரம் ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. இருந்தபோதிலும், அத்திருடன்
இன்று பாலாமணியின் பார்வையில் படாமல் இருந்தது அவருக்கு வியப்பாக இருந்தது. சரி வரட்டும் இன்னைக்கு இல்லைன்னா என்ன, என்னைக்காவது வந்து தானே ஆகனும். ஆடின காலும் திருடின கையும் சும்மா இருக்குமா? என்று மனதில் நினத்துக் கொண்டே காம்பவுண்டு சுவரகளைச் சுற்றி வைத்திருந்த தன் பார்வையை மாற்றி, வீட்டின் உள்ளே மிக மெதுவாகச் சென்று விட்டார். தன் வீட்டுக் காம்பவுண்டு சுவர்கள் ஒரத்தில் நட்டு வைத்திருந்த பூச்செடிகளிலிருந்து பூக்கள் காணாமல் போவதைக் கண்டுபிடிக்கவே பாலாமணி இவ்வாறு மெனக்கெட்டு கொண்டிருந்தார். அதன் பின்பு நான்கு நாட்களாகியும் திருடனும் வரவில்லை பூக்களும் காணாமல் போகவில்லை என்பது அவருக்கு ஆச்சிரியமாக இருந்தது.

என்னாடா இது, நம்ம
காவல் காப்பது திருடனுக்கு தெரிந்து விட்டதோ? என்று
நினைத்துக்கொண்டிருந்த வேளையில் இன்று தன் மகளைப் பார்க்க ஊருக்குச் செல்ல வேண்டியிருந்ததை
நினைத்து சந்தோஷமாக இருந்தாலும், பூக்கள் திருடு போவது சிறிது சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், என்ன
ஆச்சரியம் அவர் ஊருக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து
பார்த்தபோது, பூக்கள் களவு போகாமல் இருந்தது. சரி இனிமேல் யாரும் நமது பூக்களைத் திருட மாட்டர்கள் என்று
நினைத்து தனது கண் விழித்து காவல் காக்கும் பணியை விலக்கிய மறுநாள் மீண்டும் பூக்கள்
காணாமல் போக ஆரம்ப்பித்தது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மறுநாள் திருடனைப் பிடிக்க ஜன்னல் ஓரமாக ஒரு ஸ்டூலைப் போட்டு
உட்கார்ந்து ஒரு பக்க ஜன்னல் கதவை மூடியவாறு மறைந்து காவல் காத்துக் கொண்டிருந்தார். அதற்கு பலன் கிட்டியது, சுமார்
அறுபது நிமிடக்காத்திருப்புக்குப் பின், ஒரு சிறுவன் மிக மெதுவாக
காம்பவுண்டுச் சுவரை நெருங்குவது தெரிந்தது, அவன்
பாலாமணி அம்மையார் வீட்டு வாசல் படிகளைப் பார்த்துக் கொண்டே மிக வேகமாக, அதே சமயம்
யாரு கண்ணிலும் பட்டு விடக்கூடாது என்ற பதட்டத்துடன், பூக்களைப்
பறிக்க ஆரம்பித்தான். அச்செயல், ஒரு அணில் எதாவது பழத்தைச்சாப்பிடும் போது, பழத்தைக்
கடிப்பதும் பின்பு பார்வையை ஆபத்து ஏதேனும் வருகிறதா என்று பார்க்குமே அதைப் போல் இருந்தது. பாலாமணி இதைக் கவனித்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தன் கைகள் கொள்ளும் அளவிற்கு பூக்களைப்
பறித்தவுடன் அச்சிறுவன் அவ்விட்த்தை விட்டு நகர்ந்தான். பாலாமணி அவர்களும் அவனை மறைவாகப் பின் தொடர்ந்தார், சிறிது
தூரம் சென்றதும் ஒரு மின் கம்பத்தின் அருகில்
போய், அச்சிறுவன் அர்ச்சனை செய்யும் போது கைகளை வைக்கும் பாவனையுடன், பூக்களைக்
கொட்டினான். இதைக்
கவனித்த பாலாமணி அவனை நெருங்கி, ஏய் ஏன் பூக்களை பறிச்சிட்டு வந்து ரோட்டில் போடுற என்று
கேட்டார். குரல்
கேட்டு திடுக்கிட்ட சிறுவன், பயத்துடன், கண்ணைக் கசக்கியவாறு, ஆன்ட்டி
இங்க ஒரு காக்கா கொஞ்ச நாளைக்கு முன்னால, கரண்டுல பட்டு செத்துபோச்சு, அதுதான்
இந்த இடத்துல பூக்களைப் போடுறேன் என்றது அந்த பிஞ்சு உள்ளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக