அமெரிக அதிபர் தேர்தலின் போது, அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம்
நேருக்கு நேராக நடைபெறும் விவாதங்கள் உலகப் புகழ் பெற்றவை. அமெரிக்காவில் நேருக்கு நேர் விவாதங்கள் என்பது
சட்டப்பூர்வமானதாக இல்லாவிட்டாலும்
தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. விவாதங்கள் பெரும்பாலும் அப்போதைய சூழ் நிலையில்
நிலவும் முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து அமைந்திருக்கும். யாருக்கு வாககளிக்க வேண்டும் என்று தீர்மானிக்காத
அல்லது நடு நிலை வகிக்கும் எக்கட்சியையும் சேராத அல்லது எக்கொள்கையையும் பின் பற்றாத
வாக்காளர்களைக் கவர்வதே முக்கிய குறியாக இருக்கும்.
விவாதமானது வெவ்வேறு விதமாக இருக்கும்.
சில சமயம், அவ் விவாதத்தை நடத்தும் பத்திரிகையாளராலோ அல்லது பார்வையாளர்களாலோ எழுப்பும்
கேள்விகளுக்கு பதில் சொல்வதாக அமைந்திருக்கும் மற்றும் சில சமயம், நம் நாட்டில் நடை
பெறும் வழக்காடு மன்றங்களைப் போல் ஒருவர் எழுப்பும் வாதத்திற்கு பிரதி வாதமாக இருக்கும். அவ் விவாதங்களைப் பார்வையிடும் மக்கள் வேட்பாளர்கள்
கேள்வி எழுப்பும் மற்றும் பதிலளிக்கும் விதம் மற்றும் அவர்களது உடல் மொழியை (Body
language)க் கொண்டு, தங்கள் வாக்களிக்கப் போகும் வேட்பாளரைத் தீர்மானிப்பார்கள்.
1960ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கான
பொதுத் தேர்தல் விவாதம் முதலாவதாக யு.எஸ். செனட்டர் ஜான் எப். கென்னடிக்கும் குடியரசு
கட்சி வேட்பாளரும் துணை ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்டு நிக்சனுக்கும் நடை பெற்ற போது
66 மில்லியன் மக்கள் தொலைக் காட்சியில் பார்த்தனர். அப்போதைய அமெரிக்க மொத்த மக்கள் தொகை 179 மில்லியனாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த விவாதங்கள்
நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களிடம் நிகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இங்கு உள்ள அதுவும் தமிழ் நாட்டில் நிலவும் அரசியல்
நிலைமையைப் பார்க்கும் போது மிகவும் வேதனைக் குரியதாக இருக்கிறது. ஆளும் கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவரும்
எதிரிக் கட்சித் தலைவர்களாக செயல் படுவதைத் தான் பார்க்க முடிகிறது. எத்தனையோ விடயங்களில் அமெரிக்காவைப் பின் பற்றும்
அதாவது அவர்கள் கண்டு பிடித்த பொருட்களை பயன் படுத்தும் நாம், அவர்கள் பின் பற்றும்
நேரடி விவாதத்தைப் பின் பற்றினால் என்ன? அந்த நிலை வருமா?
“ஒருவன் வீண் கூச்சலினாலும், கட்டளையினாலும் தன்னுடைய விவாதத்தை நிரூபிப்பதின்
மூலம், அவனுடைய காரணம் பலமற்றது என்பதை தெரிவிக்கிறான்”
-மைக்கேல் மாண்டக்னெ
published on 21.10.2012
நன்றி மீண்டும் சந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக